தர்மபுரி மாவட்டம் பாப்பிரப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது வழக்கம் நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை பத்தாயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 3. 64 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.