தர்மபுரி: கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் தர்மபுரியில் வழிபாடு

58பார்த்தது
இந்தியாவில் இரண்டு தட்சண காசி காலபைரவர் கோயில் மட்டுமே உள்ளன அதில் ஒன்றுதான் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் அமைந்துள்ள காலபைரவர் திருக்கோயிலாகும். இந்த காலபைரவர் திருக்கோவிலில் இன்று ராகுகால பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்சி எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். இதில் அவருடன் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முதல் மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது இதைத் தொடர்ந்து கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை ஓட்டி அதியமான் கோட்டை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி