தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை விற்பனைக்கின்றே பிரத்தியேகமான வார சந்தை நடைபெற்று வருகிறது நேற்று நவம்பர் 17 நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 10000 ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.