போச்சம் பள்ளி தாலுகா, அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுருகன்(36), ஜோதிடர். இவரது மனைவி அமுல்(34). இவர் வெளி யூர்களுக்கு சென்று பேன்ஷி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 3ம்தேதி காலை, பொம்மிடி அருகே உள்ள ரேகட அள்ளியில் சின்னமுருகன், அமுலை வியா பாரத்திற்காக விட்டு சென்றுள்ளார். மாலை வீட்டுக்கு செல்லும் போது, மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் அக்கம் பக்கம் தேடியுள்ளார். உறவினர் வீடுகளில் விசாரித்தும், அவர் குறித்து எந்த தகவலும் இல்லாததால், பொம்மிடி போலீ சில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அமுலை தேடி வரு கின்றனர்.