தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன் (38), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி குளித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட அருள் முருகன், செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். இதை அறிந்த உறவினர் ஒருவர், இதுகுறித்து சிறு மியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து உறவினர் மற் றும் தாய் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் இரவு, அருள்முருகனிடம் சென்று தட்டிக் கேட்டனர். அப் போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட் டது. இது குறித்து, சிறுமி யின் பெற்றோர், பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ' புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார், அருள்முருகன் மீது போக்சோபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.