மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்

63பார்த்தது
தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி , ஆசிரியைகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நற்சுவை சுகுமார் மாலை அணிவித்து வரவேற்றனர். அதன் பின் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு பாட புத்தகங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி