அரசு கல்லூரியில் ஆடவர் ஆணழகன் போட்டி

77பார்த்தது
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி புதிய கலை அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் தலைமையற்றார்.
கல்லூரியின் உடற்கல்வி முனைவர் கு பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். சேலம்பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் கே வெங்கடாசலம்,
பல்கலைக்கழக ஆண்கள் விளையாட்டு ஒருங்கிணை ப்பாளர் திரு ஆர் சுரேஷ் குமார் ஏ வி எஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

8 வகையான எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 மணி அளவில் பதக்கம் தகுதி சான்றிதழ்கள் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனரும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் செய்திருந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி