காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்

564பார்த்தது
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை சந்தை கூடுகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சந்தைக்கு ஆடு, மாடுகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத் தை சேர்ந்த வியாபாரிகள் சந்தையில் கால்நடைகளை வாங்க வருகின்றனர். தற்போது மழையின்றி தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று கூடிய சந்தைக்கு 300 மாடுகள், 400 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

சந்தையில் மாடுகள் 10 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலும், ஆடுகள் 6, 500 முதல் 15 ஆயிரம் வரையி லும், நாட்டுக்கோழி மற்றும் சேவல்கள் 450 முதல் 1, 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறையால் வெளிமாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வரத்து குறைந்தது. பணப் பரிவர்த்தனை முடங்கி உள்ளதால், நேற்றைய சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. சந்தையில் 20 லட்சத்திற்கு மாடுகள், 21 லட்சத்திற்கு ஆடுகள் மற் றும் 2 லட்சத்துக்கு நாட்டுக்கோழிகள் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் 43 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி