தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்ட அள்ளி காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை யினர், மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை பகுதியில், நேற்று வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. காரில் இருந்த வர்களிடம் விசாரித்த போது, அவர்கள் பாலக்கோடு கூத்தாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன் , திருப்பத்தூர் அண்ணாந்தப் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும் தெரியவந்தது. இதைய டுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்து, காரில் இருந்த 87ஆயிரம் மதிப்பிலான 111கிலோ குட்கா பொருட்களையும் 5லட்சம் மதிப்பிலான காரை யும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.