புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பாக கள ஆய்வு

67பார்த்தது
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பாக கள ஆய்வு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2024-25- சார்ந்து நடைபெற்று வரும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியும் கணக்கெடுப்பு பணி சார்ந்து இன்று மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் இணை இயக்குனர் பொன் குமார் , முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, உதவி திட்ட அலுவலர் இரவிக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து தருமபுரி ஒன்றியம் கொட்டாய்மேடு காலனி, A. கொல்லஹள்ளி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியம் அவ்வை நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இணை இயக்குநர் கண்டறியப்பட்ட கற்போர்களிடம் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி