தர்மபுரி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

77பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடை மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து மற்றும் குழந்தைகளுக்கான நட என்ற குழந்தைகள் தின உறுதி மொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதே வழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை ஆட்சித்தலைவர் கி. சாந்தி தொடங்கி வைத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி