விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரத்பாபு (24) கடந்த நவ. 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ. 12) மாடு கட்டும் கயிற்றால், சரத்பாபு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.