தர்மபுரியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

76பார்த்தது
நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வரும் நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 1, 341 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் நேற்று அதிகாலை முதல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். தருமபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் நேற்று மோட்டார் மெக்கானிக் சங்கம் ஸ்ரீ விநாயகா நற்பணி மன்றம் சார்பாக ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 10 அடி உயரத்திற்கு மேல் சித்தி புத்தி பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைத்து இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை அழைத்து அவரையே விநாயகருக்கு கற்பூர தீப ஆராதனைகள் காட்டி பூஜை செய்து சமத்துவ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து விநாயகர் கோயில்களிலும் பக்தர்களுக்கு சுண்டல் கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி