அரசு அங்காடியில் 8. 61 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

67பார்த்தது
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உற்பத்தி குறைந்ததால் அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைந்தது. இந்த நிலையில் நேற்று அங்காடிக்கு வரத்து அதிகரித்தது. விவசாயிகள் நேற்று 1, 945 கிலோ பட்டுக்குடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர் அதன் படி நேற்று 1கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 537 ரூபாய் க்கும் குறைந்தபட்சமாக 270 ரூபாய்க்கும், சராசரியாக 442. 67 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 8 லட்சத்து 61ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி