முதல்வர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் 1300 போலீசார்

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாளையம் புதூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் இந்த விழாவை ஒட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பவானிஸ்வரி மேற்பார்வையில் 2 டிஐஜிக்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உட்பட 4 போலீஸ் சூப்பிரண்டுகள், தர்மபுரி சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி கோவை திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் முதல்வர் வருகை ஒட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் இருக்கும் சாலைகள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் விழா நடைபெறும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி