மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

51பார்த்தது
தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே கருங்கல்பாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (42), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், விவசாய தோட்டத்தில் மின் இணைப்பை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று சண்முகம் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி