புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சுவாமிக்கு படையெடுத்து வழிபடுவது வழக்கம். இதனை அடுத்து புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை ஜோராக நடைபெறும்.
நேற்று (செப்.21) தர்மபுரி உழவர் சந்தையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு அதிகாலை முதல் வர தொடங்கினர். சாதாரண நாட்களில் 25 டன் காய்கறிகள் விற்பனையாகும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34 டன் காய்கறிகள், மற்றும் 3 டன் பழங்களும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். மேலும் நேற்று உழவர் சந்தைக்கு 142 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்க உழவர் சந்தைக்கு வந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.