தரமான விதை உற்பத்திக்கு தொழில்நுட்பங்கள் தேவை; அதிகரி தகவல்

74பார்த்தது
தரமான விதை உற்பத்திக்கு தொழில்நுட்பங்கள் தேவை; அதிகரி தகவல்
தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா நேற்று (செப்.,16) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தரமான விதை உற்பத்தி செய்ய, விதை உற் பத்தியாளர்கள் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும். தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும்.

அதாவது குறிப்பிட்ட தர நிர்ணயித்திற்குள், ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் பிறரககலப்பு ஆகியவற்றை கொண்ட தாகும். உற்பத்தி செய்த விதைக்கு விதைச்சான்று பெறுவதற்கும், விதையை சேமிப்பதற்கும் ஈரப்பதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

விதையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு மேல் இருந்தால், சேமிப்பின் போது பூச்சிநோய் தாக் குதல் ஏற்பட்டு, முளைப் புத்திறன் பாதிக்கப்படும். தேவையான ஈரத்தன்மைக்கு கொண்டு வந்து சேமித்தால், விதை களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடிகி றது. எனவே, விதை உற் பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள், தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதம் அறிந்து கொள்ள, விதைக் குவியலிலிருந்து 100 கிராம் விதை மாதிரி எடுத்து காற் றுபுகாத பாலித்தீன் பைக ளில் அடைத்து பயிர், ரகம், குவியல் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு அனுப்ப
வேண்டும்.

முகப்புக் கடிதத்துடன் ஒரு மாதிரி பரிசோதனைக்கு ரூ.80 வீதம் கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்தால், விதை மாதிரி கள் பரிசோதனை செய்யப் பட்டு, முடிவுகள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக் கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி