அரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் , அரூரில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரங்களில், கனமழை பெய்த போதும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 6ம் தேதி 91 டிகிரியும், 7ம் தேதி 89 டிகிரியுமாக வெயில் பதிவானது. 8ம் தேதி 77 மிமீ மழை பெய்தது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் 92 டிகிரி கொளுத்தியது. தொடர்ந்து 2 வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த போதும், நேற்று காலை முதல் வெயில் 90 டிகிரிக்கு மேல் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமானதால், மழை பெய்தும் இரவு நேரத்தில் மக்கள் புழுக்கத்தால் அவதிப்படுகின்றனர்

தொடர்புடைய செய்தி