₹26 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

81பார்த்தது
கம்பைநல்லூரில் நடக்கும் வார சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர்ககள் ஆடு, நாட்டுக்கோழிகளை விற் பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.
இந்த ஆடு, கோழிகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்ம புரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு வருகின்றனர் நேற்று கூடிய சந்தைக்கு 230க்கும் மேற்பட்ட ஆடு கள் விற்பனைக்கு வந்திருந்தது.
பெட்டை, கிடாய் மற்றும் குட்டி ஆடுகள் எடைக்கு தகுந்தார்போல் ₹500 முதல் ₹9, 700 வரை யும், நாட்டுக்கோழி, சேவல் ஆகியவை ₹350 முதல் ₹1, 200 வரையி லும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற் றைய சந்தையில் ₹26 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி