சேலம் வீராணம் அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம், தர்மபுரி, அரூர், நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்ளிட்ட 11 பகுதிகளில் SVS என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். மக்களை கவரும் வகையில் பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பனம் நகைகளை ஏமாற்றி தீபாவளி பண்டிகை்கு முன்னரே கடையை பூட்டி விட்டு மக்களிடம் வாங்கிய நகை, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
இதில் பழைய நகை மற்றும் சீட்டு தொகை என சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார். இதில் ஏமாற்றம் அடைந்த மக்கள்போலீசில் கொடுத்த புகாரின் பேரில தருமபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சபரிசங்கர், மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 13. 75 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான சபரிசங்கர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்று சபரிசங்கரை 28. 05. 2024. அன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது தர்மபுரி மாவட்டம் அரூரில் இயங்கி வந்த SVS நகைக்கடையில் பணியாற்றிய பணியாளர்களிடம் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர்