₹11 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

58பார்த்தது
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத் தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், அரூர், கம்பைநல்லூர், கோட் டப்பட்டி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலிருந்து 103 விவசாயிகள், 450 பருத்திமூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் எம்சி 5 ரக பருத்தி குவிண் டால் ₹6, 409 முதல் ₹7, 469 ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ₹11 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக, செயலர் அறிவழகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி