புத்தக திருவிழா.. ஆலோசனை கூட்டம்

69பார்த்தது
புத்தக திருவிழா.. ஆலோசனை கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை மதுராபாய் திருமண மஹாலில் வருகின்ற 04. 10. 2024 முதல் 14. 10. 2024 வரை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் புத்தக திருவிழா பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தலைமையில் இன்று செப்டம்பர் 21 ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய, அவர்களிடையே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் மாவட்ட நிருவாகம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடையேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந்தும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவைக் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.  

இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேண்டிய நூல்களும், போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெற செய்ய உள்ளனர். எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி