தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கச்சேரிமேட்டில் அதிமுக சார் பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நேற்று செப்டம்பர் 22 இரவு நடைபெற்றது. நகர செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மொரப் பூர் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பசுபதி, செண்பகம் சந்தோஷ், கீரை சம்பத், விஸ்வநாதன், மதி வாணன், தனபால், பாஷா, சிவா, சாமிகண்ணு, பழனி முருகன், கலைவாணன், பூபதி முன்னிலை வகித்தனர். முன்னாள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தற்போது பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமான கே. பி. அன்பழகன், அமைப்புச் செயலாளர் ராமு, தலைமை கழக பேச்சாளர்கள் பார்த்தசாரதி, எம்எல்ஏகள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அசோக்குமார், முஷ ரத்காதர், வஜ்ஜிரம், சேகரன், கௌதமன், சம்பத், சிட்டு முருகேசன், சக்திவேல், அர விந்தன், சந்தோஷ், ராணி மற்றும் பலர் கலந்து கொண் டனர். மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.