ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது 2 பேர் தப்பி ஓட்டம்

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள பொண்ணாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலேசன் (வயது 54). இவர் தனது தோட்டத்தில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 8-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த் துள்ளார். அப்போது 2 ஆடுகளை காணவில்லை. அதே நேரத்தில் ஒருமோட்டார் சைக்கிள் விளக்கை ஒளிரவிடாமல் சென்றதால் சந்தேகம் அடைந்து அவர் சத்தம் போட்டு உள் ளார். அதற்குள் அந்த வண்டி சென்று விட்ட நிலையில், போடம்பட்டி ஜெயபால் என்பவர் வீட்டில் சந்தேகப்படும்ப டியாக 2 ஆடுகள் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்தனர். அங்கு கமலேசனின் காணாமல் போன 2 ஆடுகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் மொரப்பூர் போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் மகன் நவீன் (19), திருப்பூர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தசரவணன் மகன் நிர்மல், வெங்கடாசலம் மகன் நந்தகோபால் (19), திருப் பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் ராம்சரண் ஆகியோர் ஆடுகளை திருடியது தெரியவந் தது. இதையடுத்து ஆடுகளை திருடிய நவீன், நந்தகோபால் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறை வான நிர்மல் மற்றும் ராம்சரண் ஆகியோரை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி