ஆடுகள் திருடிய 2 பேர் கைது

76பார்த்தது
கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகள் திருட்டு போனது. இது குறித்து அவர் கம்பைநல் லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆல்ரப்பட்டியை சேர்ந்த வீரமணி (வயது 33) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய் தனர்.

தொடர்புடைய செய்தி