பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்., 6) ராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு ராமநாதசாமி கோயிலில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனம் மற்றும் தீர்த்த நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு மேல் வழக்கம் போல் கோயிலில் தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.