இணையத்தில் கசிந்த 50 கோடி லிங்கெடின் பயனர்களின் விவரங்கள்

20814பார்த்தது
இணையத்தில் கசிந்த 50 கோடி லிங்கெடின் பயனர்களின் விவரங்கள்
பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி பயனர்கள் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆன செய்தி அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது லிங்கெடின் பயனர்களின் விவரங்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சுமார் 50 கோடி பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.அதில் பயனாளிகளின் லிங்கெடின் ஐடி, பெயர், மொபைல் நம்பர், சமூக வலைத்தள கணக்குகள் உள்ளிட்ட பல விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளதாம். குறிப்பாக இவை அனைத்தும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இணையதளத்தில் வெளியான லிங்கெடின் பயனர்களின் தகவல்கள் பல வலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆனால் இவை லிங்கெடின் நிறுவனம் மூலம் வெளியாகவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி