ஓட்டல் சாம்பாரில் இறந்த எலி (வீடியோ)

71பார்த்தது
அகமதாபாத்தில் உள்ள நிக்கோல் பகுதியில் உள்ள தேவி தோசா உணவகத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் உணவு ஆர்டர் செய்தபோது சாம்பாரில் இறந்த எலி இருப்பதைக் கண்டார். இதற்கு உணவக ஊழியர்கள் பொறுப்பேற்காமல் அலட்சியமாக நடந்து கொண்டனர். இதையடுத்து அந்த வாடிக்கையாளர், உணவகத்தின் உரிமையாளரான அல்பேஷ் கெவாடியா மீது அகமதாபாத் மாநகராட்சியின் (ஏஎம்சி) சுகாதாரத் துறையில் புகார் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி