சொத்துக்காக மாமனாரை கார் ஏற்றிக் கொன்ற மருமகள்!

57பார்த்தது
சொத்துக்காக மாமனாரை கார் ஏற்றிக் கொன்ற மருமகள்!
மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூர் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த புருசோத்தம் (82) என்ற முதியவர் கடந்த மாதம் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் காரை ஏற்றிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, புருசோத்தம் மருமருகளான நகர திட்டமிடல் துறை உதவி இயக்குநர் அர்ச்சனாவை (53) விசாரித்ததில் உண்மை வெளி வந்துள்ளது. புருசோத்தமனின் ரூ.300 கோடி சொத்துகளை அபகரிக்க எண்ணிய அர்ச்சனா அவரை கார் ஏற்றி கொன்றுள்ளார். இதையடுத்து, அர்ச்சனாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி