'தங்கல்' பட நடிகை காலமானார்

94169பார்த்தது
'தங்கல்' பட நடிகை காலமானார்
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் 2016-ல் வெளியான 'தங்கல்' படத்தில் பபிதா போகத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுஹானி பட்நாகர் (19) மரணமடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறிது காலத்திற்கு முன்பு அவரது கால் முறிந்தது. சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அவரது உடலில் நீர் கோர்த்து இருந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதில் நடிகை உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி