மனிதர்கள் விரிக்கும் வலையில் ஐந்தறிவு ஜீவன்கள் மாட்டிக்கொள்வதே வழக்கம். இருப்பினும், ஒரு எலி புத்திசாலித்தனமாக எலிப்பொறியில் இருந்து தப்பி, தனக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. உணவுடன் பொறி வைக்கப்படும் போது, எலி அதை கவனிக்கிறது. தொடர்ந்து, மரக்குச்சியை வாயில் கவ்விக்கொண்டு வந்து, பொறியை தலைகுப்புற கவிழ்த்தி விட்டு, உணவை எடுத்துச் செல்லும் அரிய காட்சியை நாம் வீடியோவில் காணலாம். இதைப் பார்த்த நெட்டிசன்கள் எலி வீட்டு உரிமையாளருக்கு சவால் விட்டுள்ளதாக கமெண்ட் அடித்துள்ளனர்.