ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய நகர்வாக அடர்ந்த மேகக்கூட்டம் உருவாகி வருவதால் சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் நகரும் சூழலில் திடீரென மேகக் கூட்டங்கள் நிலத்தை நோக்கி நகர்கின்றன. இதனால் புயல் இன்று கரையைக் கடக்காது என்றும் நாளையே கரையைக் கடக்கும் என கூறியுள்ளார்.