விருத்தாசலம்: 2 கடையில் பூட்டை உடைத்து திருட்டு

76பார்த்தது
விருத்தாசலம்: 2 கடையில் பூட்டை உடைத்து திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் செந்தில் இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிச் சென்றார்.

நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்க்கையில் கல்லா பெட்டியில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதே போல ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கடை உள்ளே இருந்த செல்போன் மற்றும் 110 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த தனித்தனி புகார்களின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி