விருத்தாசலம்: 4 பேர் மீது வழக்கு பதிவு

54பார்த்தது
விருத்தாசலம்: 4 பேர் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெனித், ரஜினி மகன் ராஜேஷ், வைத்தியநாதன் மகன் பரணிதரன், சிவபிரகாசம் மகன் ரஞ்சித். இவர்கள் 4 பேர் நேற்று முன்தினம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே கபடி போட்டி நடத்துவதாக விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி