கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (30. 09. 2024) காலை நிலவரப்படி லால்பேட்டை 1 சென்டி மீட்டர், சேத்தியாத்தோப்பு 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளதால் ஒரு சில இடங்களில் மழைநீர் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.