வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலய மாசிமக திருத்தேர் வடம் பிடிக்க நகர், சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மேல்பாதி முக்கியஸ்தர்கள் மாலை, சந்தனம் எடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து வேப்பூர் தாசில்தார், நல்லூர் மற்றும் நகர் கிராம தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர், திருவிழா உபயதாரர்கள், முக்கியஸ்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.