தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு சித்திரை திருவிழா கடந்த ஏப். 6-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 15) திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.