பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தீர்மானித்துள்ளது. திருச்சியில் நடந்த செயற்குழுவில் பேசிய மாநில தலைவர் நெல்லை முபாரக், 'அதிமுக மீது சவாரி செய்யும் பாஜகவை தமிழக மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணி கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சி பாஜக கூட்டணிக்கு எதிராக வலுவாக களமாடும்' என தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் பயணித்த எஸ்டிபிஐ இனி எந்த அணியில் பயணிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.