கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேல் ஆதனூர் கிராமத்தில் இருந்து வெளியிட்ட நீர் தேக்க வழியாக திட்டக்குடிக்கு செல்லும் காட்டுவழி சாலை உள்ளது இந்தச் சாலையில் பல வாகன ஓட்டிகள் செல்வது வழக்கம்.
இந்தச் சாலை பல மாதங்களாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள் மேலும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.