கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூர் ஊராட்சியில் புதிய அரசு நியாய விலை கடையை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்தார். பின்னர் திட்டக்குடி வார்டு பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகரச் செயலாளர் வி பி பி பரமகுரு, நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், அயலகனி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி விக்கி, வட்டாட்சியர் அந்தோணி தாஸ், ஆர்டிஓ, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.