குஜராத்தின் சூரத்தில் போர்சரான் கிராமத்தின் புறநகர் பகுதியில் நேற்று (அக் 08) 16 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி தனது நண்பருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் அவரை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.