கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒட்டகத்திற்கு உட்பட்ட இடைச்செருவாய் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் குடிநீர் மோட்டார் அறை அமைக்கப்பட்டது.
இந்த அறையினை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் நகரச் செயலாளர் பரமகுரு நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர் நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மற்றும் அதிகாரிகள் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.