கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை பகுதியை சேர்ந்த சாமிதுரை. இவர் ஊர் ஊராக இருசக்கர வாகனத்தில் சென்று கொய்யப்பழம் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் சாமிதுரை நேற்று கடலூரில் கொய்யாப்பழம் வியாபாரத்தை முடித்து விட்டு, சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு - ராசாபாளையம் சாலையில் சென்றபோது, எதிரே கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரின் பின்பக்க டிப்பர் இணைப்பு திடீரென கழன்றதால் டிப்பர் ஓடி, சாமிதுரை இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் டிப்பர் சக்கரத்தில் சிக்கி சாமிதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.