கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் ஆலயத்தில் ஆடி மாத செடல் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று முக்கிய வீதிகளில் மாட்டு வண்டியில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இது மட்டுமல்லாமல் அம்மன் நேற்று இரவு யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.