பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

571பார்த்தது
பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி தமிழர்கள் காவல்துறையினரால் காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில் ஒருவரான அப்போதைய தென் மண்டல ஐஜி திரு. சைலேஷ் யாதவ். அவர்களுக்கு தற்போது பனி மூப்பு அடிப்படையில் டிஜிபி யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது அதனை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்பாவி மனித உயிர்களை அநியாயமாக கொன்று குவித்த இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது நியாயமா? விசாரணை ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது எப்போது? என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.