மேல்பட்டாம்பாக்கம்: டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

65பார்த்தது
மேல்பட்டாம்பாக்கம்: டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஒவ்வொரு ஜூலை மாதமும் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டி. எம். பெண்கள் கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்புக் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் அறிவுரைப்படியும், வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் அவர்களின் ஆலோசனைப்படியும், மண்டல பூச்சியியல் வல்லுநர் மீனா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட மலேரியா அலுவலர் மூர்த்தி கொசுப் புழுக்கள் எவ்வாறு உற்பத்தி ஆகின்றது, கொசு புழுக்களை அழிக்கும் முறை குறித்து பேசினார். மாவட்ட நலக்கல்வி அலுவலர் சுரேஷ்பாபு சுகாதாரக்கல்வியின் அவசியத்தைக் குறித்தும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் டெங்கு வருமுன் காப்போம் என்பதின் அவசியத்தை குறித்தும் , மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் பார்த்திபன் இயற்கை முறையில் டெங்குவை எப்படி தடுக்கலாம் என்பதைப் பற்றியும் மாணவிகளிடையே எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி