கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழிருப்பு ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெண்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பாக முந்திரி கொட்டை உடைக்கும் மின்சார மிஷன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் வழங்கபட்டது. இதில் அருகில் உள்ள ஊராட்சியை சேர்ந்த பெண்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். உடன் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.