கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி.
இந்தியா நிறுவன பொது மருத்துவமனையில் கடந்த ஏழு வருடங்களாக செவிலியர்களாக பணிபுரிந்த FNA, MNA ஆகியோர் இம்மாதம் மூன்றாம் தேதி திடீரென மருத்துவ நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மாறாக வேறு சிலருக்கு இப்பணி வழங்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சென்று சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு எறிந்து அவர்களது
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.