கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழூர் பெயர் பலகை அருகில் உள்ள மின் கம்பத்தில் அதிக அளவில் புதர் செடிகள் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.